;
Athirady Tamil News

மாத்தறை: தாமரை மொட்டுக்கு வாக்களித்த குடும்பம் மீது தாக்குதல்..!! (படங்கள்)

0

மாத்தறை தெனியாய குருளுகல பிரதேசத்தில் தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களித்த குடும்பத்தினர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாமரை மொட்டுக்கு வாக்களித்த குடும்பம் மீது தாக்குதல்

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை தெனியாய குருளுகல பிரதேசத்தில் தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களித்த குடும்பஸ்தர்களை அடையாளம் தெரியாத குழு ஒன்று தாக்கியுள்ளது.

கடந்த காலங்களில் தேர்தல் கூட்டங்களுக்கு சென்றதாலும் நேற்றைய தினம் தாமரை மொட்டுக்கு வாக்களித்ததாலும் 5 பேர் அடங்கிய குழு ஒன்று வீட்டின் கதவை தட்டி மிளகாய் தூளை முகத்தில் வீசி கத்தியாலும்,மரக்கட்டைகளினாலும் தாக்கியுள்ளனர்.

தாமரை மொட்டுக்கு வாக்களித்த குடும்பம் மீது தாக்குதல்

இதனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் காயமடைந்த நிலையில் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் உபகரணங்களும் தேசமாக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தெனியாய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + seventeen =

*