;
Athirady Tamil News

மன்னாரில் தனியாருக்குச் சொந்தமான காணியில் தீப்பரவல்..!! (படங்கள் & வீடியோ)

0

மன்னார் – கீரி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது.

குறித்த காணியில் நேற்று (சனிக்கிழமை) மாலை ஏற்பட்ட தீயினால் மரங்கள் எரிந்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தனியாருக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் காணியே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டது.

இதன் போது குறித்த காணியில் காணப்பட்ட தென்னை மற்றும் பனை போன்ற பயனுள்ள மரங்கள் தீயில் எரிந்துள்ளது.

குறித்த தீயை கட்டுப்படுத்த மக்கள் முயற்சிகளை மேற்கொண்ட போதும் கட்டுப்படுத்த முடியவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேச மக்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ள போதும், பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் தீ முழுமையாக பரவி பாரிய சேதத்தை ஏற்படுத்தியதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − five =

*