;
Athirady Tamil News

மசூதி தாக்குதலுக்கு பதிலடி – 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக எகிப்து அறிவிப்பு..!!

0

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த ஆண்டு இறுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகினர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, அப்பகுதியில் இயங்கி வரும் தீவிரவாத கிளர்ச்சியாளர்கள் குழு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ராணுவத்திற்கு அதிபர் அல்-சிசி உத்தரவிட்டார்.

இந்நிலையில், அதே வடக்கு சினாய் பகுதியில் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் நேற்று தெரிவித்தது. 4 தீவிரவாதிகள் மற்றும் சந்தேகத்தின் பேரில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 19 =

*