;
Athirady Tamil News

ஹட்டனில் வெற்றிக் கொண்டாட்டம்! : 11 சபைகளைக் கைப்பற்றுவோம் என்கிறார் தொண்டமான்..!! (படங்கள்)

0

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாநகர சபையை தவிர்த்து ஏனைய 11 சபைகளையும் ஆட்சிக்கொள்ளும் என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் நகரில் இன்று மாலை இடம்பெற்ற தேர்தல் வெற்றிக்கான மக்கள் ஒன்றுக்கூடலில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது, நுவரெலியா மாவட்டத்தில் நாங்கள் சாதனையை உண்டுப்பண்ணுவோம் மற்றும் வரலாற்று மாற்றத்தினை ஏற்படுத்துவோம் என்ற இலக்கினை முன்வைத்து தேர்தல் களத்தில் குதித்தோம். எமக்கு 9 சபைகள் கிடைத்தால் போதும் என்று தான் எண்ணினோம். ஆனால் இன்று 11 சபைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சிக் கொள்ளும் என்பதில் எவ்வித அச்சமும் இன்றி மக்களிடம் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

13 வருடங்களுக்கு பின்னர் கொட்டகலை பிரதேச சபையை கைப்பற்றியுள்ள நாம் ஹட்டன் மாநகரத்தில் அபிவிருத்தியூடாக ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காக ஹட்டன் நகர சபையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தான் ஆட்சிக்கொள்ளும் என உறுதியாக தெரிவிக்கின்றொம்.

தலவாக்கலை நகர சபை, கொட்டகலை பிரதேச சபை, அக்கரப்பத்தனை பிரதேச சபை, நோர்வூட் பிரதேச சபை, மஸ்கெலியா பிரதேச சபை ஆகிய முக்கிய பிரதேச சபைகளை வெற்றியின் பாதையின் கீழ் ஆட்சிக்கு கொண்ட வந்த நாம் ஏனைய பிரதேச சபைளையும், ஆட்சிக்கொள்வோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − eight =

*