;
Athirady Tamil News

இறந்ததாக அறிவிக்கப்பட்ட இளைஞன் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி..!! (படங்கள்)

0

இலங்கையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட இளைஞன் உயிருடன் வந்தமையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது. இதன்போது கண்டி தேர்தல் மாவட்டத்தின் உடுநுவர தேர்தல் பிரிவில் வாக்களிக்க சென்றவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அந்தப் பகுதியை சேர்ந்த மொஹமட் ராசிக் என்ற இளைஞனின் வாக்களிக்கும் உரிமை தேர்தல் செயலகத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இம்முறை உள்ளூராட்சி தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டில் தான் உயிரிழந்துள்ளதாக தேர்தல் ஆணையத்தினால் அச்சிடப்பட்டுள்ளதாக குறித்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவரால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டமையால், வீடு திரும்ப நேரிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த நபர் வாக்களிக்கும் தொகுதிக்கு சென்ற சந்தர்ப்பத்தில் அவரால் தனது வாக்குகளை பயன்படுத்த முடியாதென அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாக்குச் சீட்டில் தேர்தல் ஆணையகத்தினால் இந்த நபர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென அச்சிடப்பட்டுள்ளது.

இதனை பார்த்து குறித்த இளைஞன் அதிர்ச்சியடைந்துள்ளார். சில காலங்களாக மொஹமட் ரசிக் என்ற இந்த நபர் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில் பல வருடங்களின் பின்னர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.

அதற்கமைய இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க சென்று கடுமையான சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் கிராம சேவகரிடம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவருக்கு வாக்களிக்க அனுமதி கிடைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*