;
Athirady Tamil News

ஓமனில் 125 ஆண்டு பழமையான சிவன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு..!!

0

பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக பாலஸ்தீனம், யு.ஏ.இ., ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கு சென்று அங்குள்ள முக்கிய தலைவர்களை சந்தித்தார். இதையடுத்து, நேற்று ஓமன் நாட்டிற்கு சென்றார். ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

மஸ்கட் நகரின் மத்ரா பகுதியில் உள்ள மிக பழமையான சிவன் கோவிலுக்கு சென்ற மோடி அங்கு நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டார். இந்த கோவில் 125 ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தைச் சேர்ந்த வியாபாரிகளால் கட்டப்பட்டது. அதனை 1999-ம் ஆண்டு புதுப்பித்தனர். மிகவும் பிரபலமான இக்கோவிலில் ஸ்ரீ ஆதி மோதீஷ்வர் மகாதேவ், ஸ்ரீ மோதீஷ்வர் மகாதேவ் மற்றும் ஸ்ரீ ஹனுமான் ஆகிய மூன்று முக்கிய விக்ரகங்கள் உள்ளன. விசேஷ நாட்களில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வர்.

வழிபாட்டிற்கு பின்னர் மோடி கோவிலுக்கு வெளியே கூடியிருந்த இந்திய சமூகத்தினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 3 =

*