;
Athirady Tamil News

மனைவியை வெட்டி சூட்கேஸில் வைத்து இரயிலில் கொண்டு சென்ற கணவன்: பொலிசார் அதிர்ச்சி தகவல்..!!

0

அமெரிக்காவில் மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்து எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் Pasadena பகுதியில் உள்ள ரெஸ்ட்டாரண்டில் Tiana Alfred(31) என்ற பெண்ணை, அவரது கணவர் Valentino Gutirrez(56) கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், Tiana Alfred-வை அவரது கணவர் கொலை செய்துவிட்டு, அதன் பின் உடல்களை வெட்டி, ஒரு சூட்கேஸில் அடைத்துக் கொண்டு இரயிலில் சென்றுள்ளார்.

அதன் பின் Los Angeles பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அவர், சூட்கேஸை அங்கு வைத்து எரித்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.

பொலிசார் இந்த கொலை சம்பவத்தை அங்கிருக்கும் சிசிடிவி காமெராக்கள் மற்றும் மொப்ப நாய்கள் உதவியுடன் கண்டுபிடித்ததாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*