;
Athirady Tamil News

காதலியை பார்க்க கள்ளத்தனமாக விமானம் ஏற முயன்ற காதலன்: கண்டிப்பாக செல்ல வேண்டும் என கண்ணீர்..!!

0

துபாயில் காதலியை பார்க்க காதலன் கள்ளத்தனமாக விமானத்தில் ஏற முயன்றதால், அதிகாரிகள் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆர்.கே. (27). துபாயில் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், தமிழகத்தில் இருந்த போது ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.

துபாய் வந்த பின்பும் அப்பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணும் இவரை காதலித்துள்ளது.

இந்த விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தால், அவர்கள் உடனடியாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனடியாக இது குறித்து துபாயில் இருக்கும் தனது காதலனிடம் கூறியுள்ளார்.

இதனால், அவர் தான் வேலை பார்த்த நிறுவனத்திடம் தாய் நாடு செல்வதற்காக விடுமுறையும், தன்னுடைய பாஸ்போர்ட்டை திருப்பித் தரக்கோரியும் கேட்டுள்ளார்.

ஆனால் நிறுவனமோ, ஒப்பந்தக் காலத்தில் விதிமுறைகளின்படிதான் அனுமதி அளிக்க முடியும் என்று கூறியுள்ளது.

தமிழகத்திற்கு கண்டிப்பாக சென்றே ஆக வேண்டும் என்று இருந்த அவர், சம்பவ தினத்தன்று, உடமைகள் எதையும் எடுத்துக் கொள்ளாமல், பர்ஸ்சை மட்டும் எடுத்துக் கொண்டு துபாய் விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் யாரும் பார்க்காத சமயத்தில் வேலியை தாண்டிக் குதித்து விமானங்கள் நிற்கும் இடத்தை நோக்கி ஓடியுள்ளார். ஏதாவது ஒரு விமானத்தில் ஏறி, தமிழகத்துக்கு சென்றுவிடுவது அவருடைய இலக்காக இருந்துள்ளது.

விமானத்தை நோக்கி ஓடிய போது, பெட்டிகளை ஏற்றி, இறக்கும் ஊழியர் அவரை பார்த்துவிடவே, உடனடியாக இது குறித்து ஊழியர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

ஆர்.கே-வை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரித்த போது, பர்ஸ்சில் இருந்த தன்னுடைய காதலி படத்தை காட்டி, அவளுக்கு திருமணம் ஆகப்போவதையும், இதனால் தான் தமிழகத்துக்கு சென்றே ஆக வேண்டிய நிலையில் இருப்பதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

அவர் கூறியது அனைத்தும் உண்மை என்று தெரியவந்ததை தொடர்ந்து, அவரை சொந்த ஜாமீனில் வெளியே செல்ல அனுமதித்தனர். ஆனால், இனி இதுபோன்று நடக்கக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + nineteen =

*