;
Athirady Tamil News

வெற்றிக்களிப்பில் தமிழர்கள் கொண்டாட்டம்.. எதிரொலியாக வீதியை துப்பரவாக்கும் படையினர்..!! (படங்கள்)

0

வெளியான தேர்தல் முடிவுகளின் பின்னர் வெற்றிபெற்ற கட்சியினை சேர்ந்த மற்றும் சுயேச்சைக்குழு வேட்பாளர்கள் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் வெடி கொழுத்தி கொண்டாடியுள்ளார்கள்.

இதனால் புதுக்குடியிருப்பு சந்தி வீதிப்பகுதிகளில் வெடிகளின் சிதறல் துண்டுகள் குப்பையாக காட்சியளித்துள்ளது.

இன்னிலையில் இதனை கண்ட புதுக்குடியிருப்பு பொலீஸார் வீதியினை பெருக்கி சீர்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் பிரதேச சபை சுகாதார ஊழியர்கள் விடுமுறையில் உள்ளதால் புதுக்குடியிருப்பு பொலீஸ் அதிகாரியின் பணிப்பின் பெயரில் பொலீஸார் வீதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு மக்கள் பாவனைக்கு உகந்தவகையிலும் மக்களுக்கு இடையூறு அற்ற வகையிலும் வீதியினை பெருக்கியுள்ளார்கள்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + eleven =

*