;
Athirady Tamil News

தொடரூந்தில் மகிழூர்தி மோதி விபத்து – ஒருவர் படுகாயம்..!!

0

ராகமை தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்து கடவையில் மகிழூர்தியொன்று தொடரூந்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இருந்து மஹவ நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தொடரூந்திலேயே குறித்த மகிழூர்தி மோதுண்டுள்ளது.

விபத்து ஏற்படும் போது மகிழூர்தியில் சாரதி மாத்திரமே இருந்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + 19 =

*