;
Athirady Tamil News

மராட்டிய மாநிலத்தில் மின்னல் தாக்கி 5 பேர் பலி..!!

0

மராட்டிய மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் வயல்வெளியில் வேலை செய்த தொழிலாளர்கள் உள்பட் 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மராட்டிய மாநிலத்தின் விதர்பா பகுதியில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. நேற்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் அப்பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் உள்பட 5 பேர் உடல் கருகி இறந்தனர். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புல்தானா, அகோலா, ஜல்னா, கோண்டியா மற்றும் விதர்பாவின் சில பகுதிகளில் விளைந்த தானியங்கள் மூழ்கி நனைந்து பாழாகின.

பலத்த மழை பெய்ததால் வார்தா மாவட்டத்தில் விளைந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாகின. மாவட்டத்தின் சில பகுதிகளில் தொலை தொடர்பு சேவை பாதிப்பு அடைந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − 7 =

*