;
Athirady Tamil News

பிரதமர் பதவி எனக்கு அவசியமில்லை: சமல் ராஜபக்ஷ…!!

0

எதிர்வரும் ஒரு சில நாட்களிலேயே பொதுத் தேர்தலையும், ஜனாதிபதித் தேர்தலையும் நடத்த வேண்டும் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,

மக்கள் தமது நிலைப்பாட்டினையே இப்போது வெளிப்படுத்தியுள்ளனர். அரசாங்கத்தின் முறையற்ற ஆட்சி முறைக்கு எதிரான மக்களின் எழுச்சியே தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆட்சி தொடரக்கூடாது என்பதே தற்போது மக்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது அதன்காரணமாக இலங்கையின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் வகையில் அடுத்த தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

அதேபோன்று அடுத்த பிரதமர் பதவி எனக்கு வழங்கப்படவுள்ளது என யாரும் தெரிவிக்கவில்லை. இந்த பிரதமர் பதவி எனக்கு அவசியமும் இல்லை நாட்டின் பிரதமரையும், ஜனாதிபதியையும் மக்கள் மாத்திரமே தெரிவு செய்ய வேண்டும்.

அம்பாந்தோட்டையில் ஐக்கிய தேசிய கட்சி சார்ந்தோர் வாக்குகளுக்காக இலஞ்சம் வழங்கியிருந்தனர். அதற்கான ஆதாரங்களும் எம்மிடம் உள்ளன. எனினும் மக்கள் அவ்வாறான போலி செயற்பாடுகளுக்கு ஏமாற்றம் அடையாமல் தமது வாக்குகளை முறையாக பயன்படுத்தியுள்ளனர் என சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 10 =

*