;
Athirady Tamil News

காதலர் தினத்தன்று காம்பவுண்டுக்குள் வரக்கூடாது – மாணவர்களுக்கு செக் வைத்த பல்கலைக்கழகம்..!!

0

உலகம் முழுவதிலும் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக முக்கிய நகரங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் கூடும் பொது இடங்களில் நாளை ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் திரண்டு காதலர் தின கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் யாரும் வரக்கூடாது என்று லக்னோ பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதுபற்றி பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட சில மணவர்கள் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடுகின்றனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்கலைக் கழகத்திற்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. எந்த சிறப்பு வகுப்பும் நடைபெறாது. பிராக்டிகல் மற்றும் கலைநிகழ்ச்சி மட்டுமே நடைபெறும். எனவே, மற்ற மாணவர்கள் யாரும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நாளை வரக்கூடாது.

மாணவர்களை அவர்களின் பெற்றோர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பக் கூடாது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் உட்கார்ந்திருந்தாலோ நடமாடினாலோ அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*