;
Athirady Tamil News

ராணுவத்தில் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவி..!!

0

ஜார்க்கண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த ஷிஷிர் மால் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற சண்டையில் சுட்டு கொல்லப்பட்டார். இது அவர் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவர் மனைவி சங்கீதா மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். அதன் பின் பல அரசு தேர்வுகளை எழுத தொடங்கினார்.

இந்நிலையில், மாலின் நண்பர்கள் சங்கீதாவை ராணுவத்தில் சேர அவரை ஊக்குவித்தனர். தன் குடும்பத்தினர் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர் பாதுகாப்பு படையில் சேருவதற்கு தேர்வு எழுதினார். அதில் தேர்ச்சி பெற்ற சங்கீதா ராணுவ பயிற்சி முகாமில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்.

நாட்டுக்காக தன் கணவனை பறிகொடுத்த பெண் ராணுவ அதிகாரியாக சேர்ந்தது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 18 =

*