;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தில் பரவி வரும் மர்ம காய்ச்சல்: சுகாதார அலுவலகம் எச்சரிக்கை..!!

0

சுவிட்சர்லாந்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக நாட்டின் சுகாதார அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சூரிச் உள்ளிட்ட முக்கிய மாகாணங்களில் சமீப காலமாக மர்ம காய்ச்சல் பரவி வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நாட்டின் மத்திய சுகாதார அலுவலகம் விடுத்துள்ள எச்சரிக்கையில், மத்திய பகுதியின் சூரிச் உள்ளிட்ட மாகாணங்களில் அதிகமாக காய்ச்சல் பரவி வருகிறது.

குறிப்பாக 1 லட்சம் நபர்களில் 313 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 வயதுக்கும் குறைவான குழந்தைகளே இந்த காய்ச்சலால் பெரிதும் பாதிக்கப்படுவதால் குழந்தைகளை சற்று கூடுதல் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், Graubünden மற்றும் Ticino மாகாணங்களில் இந்த காய்ச்சல் பெரிய அளவில் பரவவில்லை என சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − six =

*