;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தில் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம்: பட்டியலில் சூரிச், ஜெனிவா..!!

0

வழக்கமாக வாழ்க்கைத் தரத்திற்கான தர வரிசையில் முதலிடம் பிடிக்கும் சுவிட்சர்லாந்து இம்முறை போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா மற்றும் சூரிச் ஆகிய நகரங்கள் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் நகரமான ஜெனிவாவில் வாகன ஓட்டிகள் சராசரியாக 52 மணி நேரம் மோசமான போக்குவரத்து நெரிசலில் சிக்குகிறார்கள்.

சூரிச்சிலோ 51 மணி நேரம் என்று போக்குவரத்து ஆய்வுகளில் சிறந்து விளங்கும் அமெரிக்க நிறுவனமான INRIX வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியல் கூறுகிறது.

ஜெனிவாவின் வாகன ஓட்டிகள் தாங்கள் வாகனம் ஓட்டும் மொத்த நேரத்தில் 16% போக்குவரத்து நெரிசலில் செலவிடுகிறார்கள், சூரிச்சில் இது 17% ஆகும்.

இந்த ஆய்வு முடிவுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 1360 நகரங்களில் சுவிட்சர்லாந்தின் இந்த இரண்டு பெரிய நகரங்களையும் முறையே 32 மற்றும் 33ஆவது இடங்களைப் பிடிக்க வைத்துள்ளன.

ரஷ்யா தவிர்த்து மொத்த ஐரோப்பாவையும் எடுத்துக்கொண்டால் முடிவுகள் அதை விட மோசம். வாகன ஓட்டிகள் லண்டனில் 74 மணி நேரமும், பாரிஸில் 69 மணி நேரமும், இஸ்தான்புல்லில் 59 மணி நேரமும் மோசமான போக்குவரத்து நெரிசலில் செலவிடுகிறார்கள்.

ஆனால் எல்லாவற்றையும் விட அதிகமாக Los Angeles வாகன ஓட்டிகள் 102 மணி நேரம் மோசமான போக்குவரத்து நெரிசலில் செலவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + nine =

*