;
Athirady Tamil News

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எமக்கு வேண்டும் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்…!! (படங்கள்)

0

வவுனியாவில் 355ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று உள்ளுராட்சி தேர்தலின் பின்னர் சர்வதேசத்தின் வருகையே எமது உறவுகளின் மீள் வருகையை உறுதிப்படுத்தும் எனவும் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எமக்கு வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்தும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக சுழற்சி முறையில் கடந்த வருடம் சிவராத்திரி தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டு 355 ஆவது நாளை அடைந்துள்ளது.

போராட்ட களத்தில் ஒன்றினைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது போராட்டத்தினை மேற்கொண்டதுடன் தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் தமது தந்தை, சகோதரர்கள், சகோதரிகளை மீட்டத்தருமாறும் அதுவரையில் தமது போராட்டத்தினை தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 5 =

*