வழக்குகள் தாமதத்திற்கு காரணம் அதிகாரிகள் தட்டுப்பாடு…!!

அதிகாரிகள் இன்மையால் வழக்கு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதாக அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தில் சந்தேகத்திற்குறிய விசாரணைகளை மேற்கொள்கின்ற பிரிவு, DNA பிரிவு மற்றும் குற்றப் பிரிவு அதிகாரிகளில் தட்டுப்பாடு நிலவுவதாக அந்த திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இரசாயன மற்றும் இயற்பியல் விஞ்ஞான பிரிவில் விஞ்ஞானத் துறையில் விஷேட அல்லது கௌரவ பட்டம் பெற்றிருப்பது இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தில் இணைந்து கொள்வதற்கான குறைந்தபட்ச தகைமையாகும்.
இதுவே திணைக்களத்தில் உத்தியோகத்தர்கள் தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணமாக அமைந்துள்ளதென்று அந்த திணைக்களத்தின் பேச்சாளர் கூறினார்.