;
Athirady Tamil News

நீராடச் சென்ற இளைஞரை காணவில்லை..!!

0

அம்பலாந்தொடை – கொச்சிம கடற் பரப்பில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அம்பலந்தொடை – மாமடல பிரதேசத்தினை சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது நண்பர்ளுடன் இவ்வாறு நீராடச் சென்றுள்ள நிலையிலே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

காவற்துறை, கடற்படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து காணாமல் போன இளைஞரை தேடும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அம்பலாந்தொடை காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 10 =

*