;
Athirady Tamil News

இந்தியா எந்தவொரு தவறான தாக்குதல் தொடுத்தாலும் பாகிஸ்தான் உரிய பதிலடியைத் தரும்: பாக். ராணுவ மந்திரி..!!

0

காஷ்மீரில் போர் நிறுத்த உடன்பாட்டை மதிக்காமல் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காஷ்மீரில் ஜம்மு அருகே சஞ்சுவான் பகுதியில் அமைந்து உள்ள ராணுவ முகாமில் கடந்த சனிக்கிழமையன்று பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தினர் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்தார். அத்துடன், “இப்போது நடத்தி உள்ள தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படும். இந்தியாவில் பயங்கரவாதத்தை தூண்டி விடும் பாகிஸ்தான், அதற்கு உரிய விலையைக் கொடுக்க நேரிடும்” என எச்சரித்தார்.

ஆனால் இதை ஜீரணித்துக்கொள்ள முடியாத பாகிஸ்தான் ராணுவ மந்திரி குர்ரம் தஸ்தகீர் நேற்று இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்து உள்ள அறிக்கையில், “இந்தியா எந்தவொரு தவறான தாக்குதல் தொடுத்தாலும், பாகிஸ்தான் உரிய பதிலடியைத் தரும். நாட்டைக் காப்பதற்கு பாகிஸ்தான் படைகள் முழுமையான தயார் நிலையில் உள்ளன. இந்தியா வலுச்சண்டைக்கு வந்தால், தவறாக கணித்தால், தவறான தாக்குதலில் ஈடுபட்டால் அதே அளவில் திருப்பிக்கொடுப்போம்” என்று கூறப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*