;
Athirady Tamil News

வவுனியாவில் அரச வைத்தியசாலையின் வைத்தியர் பணம் பெற்று சிகிச்சையளிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு…!!

0

வவுனியாவில் பாடசாலை மாணவனின் உயிரிழப்பிற்கு காரணமான வைத்தியர் பணம் பெற்று அரச வைத்தியசாலையில் சிகிச்சையளிப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்

வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் செல்லும் நோயர்களிடம் பொது சத்திரசிகிச்சை வைத்திய நிபுணராக கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் அரச வைத்தியசாலையில் சிகிச்சை அளிப்பதற்கு தனது மேற்பார்வையிலுள்ள தனியார் வைத்திய நிலையத்திற்கு நோயாளர்களை வரவளைத்து பணம் அறவிட்டு விசேட கவனிப்புடன் அரச வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

குறித்த வைத்தியர் அண்மையில் வவுனியாவில் மாணவர் ஒருவர் விபத்தில் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் அவருக்கு தாமதித்து வைத்திய சிகிச்சை அளிக்கப்பட்டதன். காரணமாக அம் மாணவன் உயிரிழந்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

குறித்த வைத்தியர் வவுனியா சிந்தாமணி ஆலய வீதியில் தனது வீட்டுடன் தனியார் சிகிச்சை நிலையத்தினை அமைத்து மேலதிகமாக வருமானங்களைப் பெற்று வருகின்றார்.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒன்றரை இலட்சத்திற்கு அதிமாக ஊதியம் பெறும் வைத்தியர் ஒருவர் இவ்வாறு மேலதிகமாக தனியார் வைத்தியசாலையிலும் நோயர்களிடம் பணம் பெற்றுவருவது பொதுமக்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

1000ரூபா வைத்தியருக்கு 800ரூபா தனியார் வைத்திய கிசிச்சை நிலையத்திற்கு வழங்கினால் நீண்டகாலம் திகதியிடப்பட்ட சத்திர சிகிச்சையை உடனுக்குடன் மேற்கொண்டு வருகின்றார்.
வைத்தியசாலையில் குறித்த வைத்தியரின் தவறு காரணமாக சில உயிரிழப்புக்கள் அண்மையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

வைத்தியரினால் வைத்தியசாலையில் நோயர்களுக்கு மருந்து எழுதி வழங்கப்படும் சிட்டையில் வைத்தியரின் தனியார் மருத்துவமனையின் முகவரியை எழுதிக்கொடுப்பதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + seventeen =

*