;
Athirady Tamil News

பாடசாலை களஞ்சியசாலையில் இருந்து கைக்குண்டு கண்டெடுப்பு…!!

0

திருகோணமலை நகரத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் களஞ்சியசாலையினுள் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை களஞ்சியசாலையை சுத்தப்படுத்தும் போது கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

இது J.R-SFG-87 வகையைச் சேர்ந்த கைக்குண்டு என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் ஸ்தலத்திற்கு வந்த விஷேட அதிரடிப் பொலிஸார் கைக்குண்டை எடுத்துச்சென்றதாக எமது செய்தியாளர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*