;
Athirady Tamil News

சிவராத்திரிக்கு சென்று வந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் அறுவர் படுகாயம்..!! (படங்கள்)

0

திருக்கேதீஸ்வரத்தில் இருந்து சிவராத்திரி வழிபாடுகளை முடித்து திரும்பிக்கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் அறுவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துபற்றி தெரியவருவதாவது,

திருக்கேதீஸ்வரத்தில் இருந்து கொழம்பு நோக்கி பயணித்த வாகனம் வவுனியா வேப்பங்குளம் ஆறாம் ஒழுங்கையில் பகுதியில் வவுனியாவில் இருந்து கற்பகபுரம் நோக்கி சென்ற பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அறுவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் வாகனத்தில் பயனித்த சாரதி, குழநடதை உட்பட அறுவர் படுகயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 4 =

*