;
Athirady Tamil News

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை…!! (படங்கள்)

0

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று(14) மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் வடக்கச்சி பத்து விட்டுத்திட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் நிரோசா வயது 24 என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் தெரியவரவில்லை.

கிராமத்தில் நடைபெறவுள்ள பூப்புனித நீராட்டு விழாவுக்கு அயலவர்கள் சென்றிருந்த இக் கொலை இடம்பெற்றிருக்கிறது. குறித்த பெண் வீட்டிற்கு பின்புறமாக இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இறந்த பெண்ணுக்கு ஏழு வயது மகன் மற்றும் ஒன்றரை வயது மகள் உள்ளனர். கணவர் தொழிலுக்குள் சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகள் இராமநாதபுரம் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி சத்துரங்க தலமையிலான குழுவினரும் கிளிநொச்சி குற்றத் தடகவியல் பொலீசாரும் இணைந்து. மேற்கொண்டு வருகின்றார்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + sixteen =

*