;
Athirady Tamil News

அரசியல் முடிவுகள் இதனையே உணர்த்தியுள்ளன – வடக்கு முதல்வர்..!!

0

உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் வட மாகாணத்தில் பல கட்சிகளுக்கு வாக்குகள் பிரிந்து சென்றுள்ளமையும் ஒரு சில மன்றங்களை தவிர்ந்து எந்தவொரு கட்சியும் உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க அறுதி பெரும்பான்மையை பெறவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர், அவரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…”தமிழ் மக்கள் தமது தலைமைகள் மீது நம்பிக்கை இழந்துள்ளமை தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றது.

மாற்றம் ஒன்றை மக்கள் விரும்பி இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.

இதனால் தான் சில கட்சிகளுக்கு வீழ்ச்சியும், சில கட்சிகளுக்கு எழுச்சியும் ஏற்பட்டிருக்கின்றன.

அதேவேளை உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ் கட்சிகள் கொள்கை அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும்.

இந்த தேர்தலில் நான் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாக செயற்படவில்லை. அதனால் நீங்கள் இப்படிதான் செய்ய வேண்டும் என எந்த கட்சிக்கும் நான் ஆலோசனை கூற விரும்பவில்லை.

ஆனால் கொள்கையில் நாம் அனைவரும் ஒற்றுமைபட வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டுள்ளது.

கொள்கையில் எம்மவர்கள் ஒன்றிணைவார்களா என்பது கேள்வி.

நான் அறிந்த வகையில் நாட்டிலும் தமிழ் மக்கள் சம்பந்தமாகவும் மேல் எழுந்த வாரியாக மூன்று விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒன்று, சிங்கள மக்களின் காதலனாய் மகிந்த ராஜபக்ஷ இன்னமும் அடையாளப்படுத்தப்படுகின்றார் என்பது.

இதை இனவாதத்தின் பிரதிபலிப்பாக நான் பார்க்கவில்லை.

பல காரணங்கள் ஒன்றாய் சேர்ந்து அவரை முன்னிலைப்படுத்தியுள்ளது.

இரண்டு நல்லாட்சி அரசாங்கம் தமிழர்களை பொருத்தவரையில் நன்றி மறந்து, நாட்டை பொருத்தவரையில் நல்லாட்சியிலும் மக்கள் பொருளாதார முன்னெற்றத்திலும் கரிசனை காட்டமால் இதுவரை நடந்து வந்துள்ள நடைமுறை, அத்துடன் ஊழலை கட்டுப்படுத்த தீர்க்கமான முடிவுகளை எடுக்காமையும் ஒரு காரணம்.

மூன்று, தமிழ் மக்களுக்கு ஒரு முகம் அரசாங்கத்திற்கு இன்னொரு முகம் காட்டிய தலைவர்கள் இன்று சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.

தமிழ் மக்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது உண்மைதான் அதை வெறுப்பு என்று கூற மாட்டடேன், அவநம்பிக்கை என்பதே பொருத்தமான சொல்.

தெற்கிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது அதை இனவாதம் தலை தூக்கியுள்ளதாக நாம் கணிக்க முடியாது.

நாங்கள் எமது பாரம்பரியங்கள், வரலாறு, கலைகள் எமது தனித்துவம், அரசியல் சுதந்திரம் போன்றவற்றை வெளிப்படையாக கூறும்போது, சிங்கள் மக்கள் தலைவர்களும் அவ்வாறான கருத்துக்களை வெளிகொண்டு வருவது இயற்கை.

அதனால் ஏற்படக்கூடிய முறுகல் நிலையை தவிர்க்தான் மகிந்த தமது மகன் நாமலை தமிழர் கரிசனை பற்றி வெளிப்படியாக தேர்தல் முடிந்த பின் பேச வைத்திருக்கின்றார் என்று கொள்ள வேண்டும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 3 =

*