;
Athirady Tamil News

வால்பாறையில் சிறுவனை கடித்து கொன்ற சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது..!!

0

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது நடுமலை எஸ்டேட். இங்குள்ள வடக்கு பிரிவு தொழிற்சாலை குடியிருப்பில் அசாம் மாநிலத்தை சேர்ந்தமு‌ஷரப் அலி, அவரது மனைவி சுபியா ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

கணவன்-மனைவி இருவரும் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கிறார்கள். இவர்களது மகன் சைதுல் (4). இவன் கடந்த 8-ந் தேதி இரவு வீட்டின் பின்புறத்தில் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து வந்து சிறுவன் சைதுவின் கழுத்தை கவ்வி பிடித்தது.

பின்னர் அவனை அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் உள்ள புதர் மறைவுக்கு தூக்கி சென்றது. அங்கு சிறுவனின் தலையை தனியாக துண்டித்து ரத்தம் சொட்ட, செட்ட கொடூரமாக கடித்து தின்றது.

மண்டை ஓடும் தெரியும் வரை சதையை தின்று விட்டு மண்டை ஓட்டை தனியாகவும், உடலை தனியாகவும் போட்டு விட்டு புதருக்குள் ஓடி விட்டது.

இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனை கடித்து கொன்ற சிறுத்தையை சுட்டு பிடிக்க வேண்டும் என கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். சாலை மறியலும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் நடுமலை எஸ்டேட்டில் கூண்டு வைக்கப்பட்டது. மேலும் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணிக்க சிறிய அளவிலான கேமராவும் பொருத்தப்பட்டு இருந்தது.

இன்று காலை 4.45 மணிக்கு வனத்துறையினர் வைத்திருந்த கூண்டுக்குள் சிறுத்தை சிக்கியது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் நடுமலை எஸ்டேட்டுக்கு விரைந்துள்ளனர். கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வெளியே கொண்டு வந்து அடர்ந்த வனப்பகுதியில் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

சிறுத்தை பிடிபட்டதால் நடுமலை எஸ்டேட் பொதுக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × two =

*