;
Athirady Tamil News

19 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஒரே பிரசவத்தில் பிறந்த மூவர்..!!

0

அமெரிக்காவில் கடந்த 1980ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் பிறந்த ஒரே உருவ ஒற்றுமை கொண்ட மூன்று சகோதரர்கள், 19 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்தனர்.

1980ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள கல்லூரியில் ராபர்ட் நுழைந்தார். அப்போது அவருக்கு தெரியாதவர்கள் அவரை வரவேற்று, வாழ்த்தியுள்ளனர். மேலும், அவரை ‘ஈடி’ என்றும் அழைத்துள்ளனர்.

இதனால் குழப்பமடைந்த ராபர்ட், அன்று மாலை தனது அறைக்கு சென்று, அவரது நண்பர் மைக்கேலிடம் கல்லூரியில் நடந்ததைக் கூறியுள்ளார். அதன் பிறகு மைக்கேல் கூறிய விடயம் ராபர்ட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கடந்த ஆண்டு, மைக்கேலுடன் அதே அறையில் ஈடி காலண்ட் என்பவர் தங்கியுள்ளார், அவர் பார்ப்பதற்கு அப்படியே ராபர்ட் போலவே இருந்ததாக மைக்கேல் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மைக்கேல் ஒரு ஏற்பாடு செய்தார். அதாவது, ராபர்ட் மற்றும் ஈடி இருவரும் இரட்டையர்களாக இருக்கலாம் எனக் கருதிய அவர், இருவரையும் சந்திக்க வைத்தார்.

அதன் பிறகு தான் தெரிந்தது, இருவருமே 1961ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி, ஒரே தாய்க்கு பிறந்தவர்கள் என்றும், பிறகு வெவ்வேறு குடும்பத்தினரிடம் தத்து கொடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில், டேவிட் கெல்மன் என்பவர் இந்த இரட்டையர்களை தொடர்பு கொண்டார், மூவரும் நேரில் சந்தித்தனர்.

அப்போது மூவருமே ஒரே உருவ ஒற்றுமையில் இருந்துள்ளனர். மேலும், அவர்கள் மூவருமே ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

மூவருக்குமே ஒரே குணாதிசயங்களும் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தாங்கள் பிரிந்ததற்கான காரணத்தை மூவரும் ஆராய்ந்தனர்.

அதில், மனநல மருத்துவர் நியுபார் என்பவர், இரட்டையர்களைப் பிரித்து, அவர்களின் மனநிலையை ஆராய்ச்சி செய்யவே இந்த காரியத்தைச் செய்திருந்தார் என்பது தெரிந்தது.

அவரின் இந்த ஆராய்ச்சிக்கு காரணம், இயற்கையாக வளர்வதற்கும், வளர்த்தெடுப்பதற்கும் உள்ள வித்தியாசங்களை அறிவதே ஆகும்.

அதன்படி, மூவரும் வெவ்வேறு குடும்பங்களுக்கு தத்து கொடுக்கப்பட்டனர். அதன் பின்னர், அவர்களுக்கு தெரியாமலேயே மருத்துவக் குழு அவர்களைக் கண்காணித்து வந்தது.

ஆண்டுக்கு ஒருமுறை இந்த மருத்துவக் குழுவானது, இந்த குடும்பங்களை ஒன்றிணைத்து, மூன்று குழந்தைகளிடமும் தனித்தனியாகப் பேட்டி எடுத்தது. மேலும், அவற்றை ஆவணப்படுத்தி வைத்தது.

அந்த ஆவணப்படத்தில் டேவிட்டின் தாயார் கூறுகையில், ‘குழந்தை தூங்கி எழும்போது, ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு சகோதரன் இருக்கிறான் என்று கூறுவான். இவனது கற்பனை சகோதரன் குறித்து நாங்கள் அடிக்கடிப் பேசியது உண்டு.

பிற்காலத்தில் தன் சகோதரனை நினைத்து இவன் மன அழுத்தத்திற்கு ஆளானான்’ என தெரிவித்திருந்தார். இந்த விடயங்களை அறிந்த ராபர்ட், டேவிட், ஈடி மூவரின் வளர்ப்புப் பெற்றோரும் கோபமடைந்தனர்.

ஆனால், அவர்களால் இந்த மருத்துவக் குழுவை சட்டப்படி தண்டிக்க முடியவில்லை. மருத்துவரும், அவரது ஆராய்ச்சிக் குழுவினரும் இதற்காக எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை, இழப்பீடும் வழங்கவில்லை. மேலும், மருத்துவர் நியுபார் தற்போது உயிருடனும் இல்லை

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 16 =

*