;
Athirady Tamil News

8 மாத குழந்தையை சாத்தானுக்கு பலி கொடுத்த கொடூர தாயார்..!! (வீடியோ)

0

மெக்ஸிகோ நாட்டில் தனது 8 மாத குழந்தையை தாயார் ஒருவர் சாத்தானுக்கு நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியான காணொளியில் கொல்லப்பட்ட குழந்தையின் உருவம் கறுப்பு வண்ணத்தில் குடியிருப்பின் ஒருபகுதியில் வரையப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

பொதுமக்களால் தகவல் பெறப்பட்டு குறித்த குடியிருப்பை முற்றுகையிட்ட பொலிசார், வீட்டின் ஒருபகுதியில் இருந்து குழந்தையின் சிதைக்கப்பட்ட உடல் பாகங்களை மீட்டுள்ளனர்.

மட்டுமின்றி சாத்தான் பூசைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பொலிசார் மீட்டுள்ளனர். அதில் மனித மண்டை ஓடு, சாத்தான் உருவம், மெழுகுவர்த்திகள் என பல பொருட்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

Leticia என அறியபட்ட குறித்த தாயார் தமது மகனுக்கு Belcebu என பெயரிட்டுள்ளார்.இது Beelzebub எனும் சாத்தானின் பெயரையே தமது குழந்தைக்கு சுருக்கமாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறித்த நரபலி சம்பவத்தில் அவரின் தற்போதைய கணவரும் உடந்தை என தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி குழந்தையின் உண்மையான தந்தையை கடந்த 8 மாதமாக ஒருமுறை கூட நேரில் பார்க்க அனுமதிக்கவில்லை எனவும் அவர் தமது முன்னாள் மனைவி குறித்து பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தமது குழந்தையை அவர் துஷ்பிரயோகம் செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

பொலிசாரின் தீவிர தேடுதல் முயற்சிக்கு பின்னர் கைது செய்யப்பட்ட Leticia மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*