;
Athirady Tamil News

இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்படுவதினை கண்டித்து மகஜர் கையளிப்பு..!! (படங்கள் & வீடியோ)

0

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்படுவதினை கண்டித்து, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள், இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடி தமது கண்டனத்தை தெரிவித்ததோடு, மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கைளிக்கும் வகையில், மாவட்டச் செயலக நிர்வாக அலுவலகரிடம் தமது மகஜரை கையளித்துள்ளனர்.

தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் இவ்வாறு இந்து விக்கிரகங்களை உடைத்தும், களவாடிச் செல்கின்ற சம்பவங்கள் உடன் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், மன்னார் மாவட்டத்தில் மத ஒற்றுமையை கெடுக்கும் வகையில் இடம்பெறுகின்ற குறித்த சம்பவங்களுக்கு பொலிஸாரும், உரிய அதிகாரிகளும் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்து மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு மன்னார் மாவட்டத்தில் மூன்று இடங்களில் சிலைகள் உடைக்கப்பட்டமை மற்றும் திருடிச் செல்லப்பட்டது. அத்தோடு சிவராத்திரி தினமான நேற்று ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டதோடு, களவாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக மன்னாரில் இருந்து “இராவணேஸ்வரன்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*