;
Athirady Tamil News

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி..!!

0

தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கருணாநிதி தனது சொந்தப் பொறுப்பில் அளித்த ரூ.5 கோடியினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை, எளிய நலிந்தோருக்கு உதவித்தொகையாக 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.

2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.4 கோடியே 49 லட்சத்து 90 ஆயிரம் ஆகும். 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் நேற்று வழங்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 5 =

*