;
Athirady Tamil News

தெல்லிப்பழை வீதியில் கால்பந்தாட்ட நடுவர் ஒருவர் வாள்வெட்டுக்குள்ளாகி படுகாயம்..!!

0

இளவாளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளான் சந்தி அராலி – தெல்லிப்பழை வீதியில் கால்பந்தாட்ட நடுவர் ஒருவர் வாள்வெட்டுக்குள்ளாகி படுகாயமடைந்தார்.

அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.

உரும்பிராயைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 58 ) என்பவரே வாள்வெட்டுக்குள்ளாகிப் படுகாயமடைந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய வாள்வெட்டுக் கும்பலே வீதியால் பயணித்த நடுவர் மீது வெட்டிவிட்டு தப்பித்தது.

சம்பவம் தொடர்பில் இளவாளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*