;
Athirady Tamil News

உருக்குழைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு…!! (படங்கள்)

0

காலி மாவட்டத்தின் அகுரஸ்ஸ – காலி பிரதான வீதியின் அகுரஸ்ஸ ஹேனிகம பிரதேசத்தில் தேயிலை செடிகளில் இருந்து உருக்குழைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி பிரதேசத்தில் துர்நாற்றம் வீசியதை அவதானித்த ஊர் மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 03.00 மணியளவில் அகுரஸ்ஸ பொலிஸாரினால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தின் அருகில் டோச் லைட் ஒன்று மாத்திரம் காணப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர், யார் எவர் என்ற தகவல் ஒன்றும் தெரியாத நிலையில் அகுரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*