;
Athirady Tamil News

காவற்துறை கான்ஸ்டபில் ஒருவர் கைது…!!

0

கடமையில் இருந்த காலப்பகுதியில் பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் முன்னாள் காவற்துறை கான்ஸ்டபில் ஒருவரை மாதம்பே காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடக்கம் சேவைக்கு சமூகமளிக்காக கான்ஸ்டபில் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.

மாதம்பே – நான்கடவர பிரதேசத்தை சேர்ந்த இவர் ஜா-ஹெல காவல் நிலையத்தில் கடமை புரிந்து வந்துள்ளார்.

கடந்த வருடம் ஜுன் மாதம் சிலாபம் – கொழும்பு வீதியின் பம்பல பிரதேசத்தில் உந்துருளியொன்றை நிறுத்தி அதில் வந்தவரிடம் இருந்து சுமார் ஆறாயிரம் ரூபாவினை கொள்ளையிட்டுள்ளதுடன் அவரிடம் இருந்த வங்கி கடனட்டையில் இருந்து ஐந்தாயிரம் ரூபாவினை மோசடியான முறையில் பெற்றுள்ளதாக காவற்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதே வருடத்தின் நவம்பர் மாத்தில் மாதம்பே – பதிரென்தாவ வீதியில் உந்துருளியொன்றை நிறுத்தி அதிலிருந்தவரிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் ரூபாவையும் குறித்த கான்ஸ்டபில் கொள்ளையிட்டுள்ளதாக மாதம்பே காவற்துறைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகநபருக்கு எதிராக குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் கடமைக்கு செல்வதை தவிர்த்துள்ள நலையில் , அவர் வசித்து வந்த பிரதேசத்தில் இருந்து ;்தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் , சந்தேகநபரை தேடி வந்த மாதம்பே காவற்துறையினர் நேற்று அவர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் , மாதம்பே காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*