;
Athirady Tamil News

தனிமையில் வசித்த வந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற அயலவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!

0

நோட்டன்பிரிட்ஜ் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கிரிவன்எலிய விதுலிபுர பகுதியில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருகுலைந்த நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவரின் சடலம் ராஜபக்ஸ முதியன்சலாகே குசுமாவத்தி வயது 79 என அடையாளம் காணப்பட்டுள்ளது.இவர் நான்கு பிள்ளைகளின் தாயாவார்.

குறித்த பெண் நீண்ட காலமாக குறித்த வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ள நிலையில் , கடந்த மூன்று மாதங்களாக முதியோர் கொடுப்பனவை பெற சமூகமளிக்காததால் அயலவர்கள் சிலர் நேற்று பிற்பகல் குறித்த வயோதிப தாய் வசித்து வந்த வீட்டிற்கு சென்று கதவை திறந்து பாரத்துள்ளனர்.

இதன்போது , வீட்டின் அறையில் பெண்ணின் எலும்பு கூடு மற்றும் தலை கிடப்பதை பார்த்த அவர்கள் நோட்டன்பிரிஜ் காவற்துறைக்கு அறிவித்தனர்.

அதன்படி , விரைந்த காவற்துறையினர் குறித்த வயோதிப தாயின் உடற்பாகங்களை மீட்டுள்ளனர்.

இந்த வயோதிப தாயின் மூத்த மகன் மற்றும் கணவர் உயிரிழந்துள்ள நிலையில் , மற்றைய பிள்ளைகள் தூர பிரதேசங்களில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளாரா தொடர்பாக நோட்டன் காவற்துறையினரும், அட்டன் கை ரேகை அடையாளப்பிரினரும் இணைந்து புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இவர் முதியோர் கொடுப்பனவை பெற்று உயிர் வாழ்ந்து வந்துள்ளதாக பிரதேசவாகிகள் தெரிவித்தனர்.

இந்த மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இன்று ஹட்டன் நீதவானால் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + sixteen =

*