;
Athirady Tamil News

மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்..!!

0

திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய 3 மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் வரும் 18-ம் தேதியும், மேகாலயா மற்றும் நாகலாந்தில் வரும் 27-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை மார்ச் 3-ம் தேதி நடக்கிறது.

60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேகாலயா மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் வெளியிட்டனர்.

இந்நிலையில், மேகாலயா சட்டப் பேரவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் தயாரான தேர்தல் அறிக்கையை பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

இதுதொடர்பாக மாநில பா.ஜ.க.வினர் கூறுகையில், மேகாலயா சட்டப் பேரவை தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை மூத்த தலைவரும், பாதுகாப்பு துறை மந்திரியுமான நிர்மலா சீதாராமன் இன்று கட்சி அலுவலகத்தில் வெளியிட்டார் என்றனர்.

அப்போது பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளரும், மேகாலயா மாநில பொறுப்பாளருமான நளின் கோலி மற்றும் மாநில தலைவர் ஷைபுன் லிண்டோ உள்பட பலர் உடனிருந்தனர்.

ஆனால், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 5 =

*