;
Athirady Tamil News

ஐ.தே.க தலைமை மாறுமா..?

0

ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைத்து அதன் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல இணக்கம் காணப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கட்சியை மறுசீரமைப்பதோடு, தற்போதைய அரசாங்கத்தின் குறைபாடுகளும் நிவர்த்திசெய்யப்பட்டு முன்னோக்கிக் கொண்டுசெல்லப்படுமென கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமை மாற்றப்பட வேண்டுமென ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்தோடு, ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் ஏற்பதற்கு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கட்சிக்குள் அதிரடியான மாற்றங்கள் நிகழுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கட்சியின் தலைமையை மாற்றாமல் தனித்து ஆட்சியமைக்குமாறு ஐ.தே.க.வின் பின்வரிசை உறுப்பினர்கள் அண்மையில் ரணிலிடம் தெரிவித்திருந்த நிலையில், கட்சி மறுசீரமைப்பு பணியின் போது பின்வரிசை உறுப்பினர்களுக்கு முக்கிய பதவிகள் பகிரப்படலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + twelve =

*