;
Athirady Tamil News

காவல் நிலையத்தில் அடித்துக் கொண்ட பா.ஜ.க. பெண் பிரமுகர்-கான்ஸ்டபிள்..!! (வீடியோ)

0

உத்தர பிரதேச மாநிலம் பரேலி நகரைச் சேர்ந்த பா.ஜ.க. பெண் பிரமுகர் ஜோதி மிஸ்ரா, நேற்று முன்தினம் இரவு கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்குச் சென்றார். அப்பகுதியில் நடந்த அடிதடி தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யும்படி அவர் வலியுறுத்தினார். அப்போது அங்கு பணியில் இருந்த கான்ஸ்டபிள் விபினுக்கும் ஜோதி மிஸ்ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், போலீஸ் கான்ஸ்டபிள் என்றும் பாராமல் அவரது கன்னத்தில் ஜோதி மிஸ்ரா பளார் என அறைந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத கான்ஸ்டபிள், பதிலுக்கு ஜோதி மிஸ்ராவை அறைந்தார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஜோதி மிஸ்ராவின் ஆதரவாளர்கள் அந்த கான்ஸ்டபிளை தாக்கினர். இந்த காட்சிகள் அடங்கிய சிசிடிவி கேமராவில் பதிவானது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். மேலும், கான்ஸ்டபிள் விபின் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதே பரேலி நகரில் கடந்த சில தினங்களுக்கு முன் பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினர், கிலா காவல் நிலையத்தை அடித்து நொறுக்கியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − one =

*