;
Athirady Tamil News

6 மணி நேரத்தில் 2501 பேருக்கு ரத்த பரிசோதனை – அரசு சாரா தொண்டு நிறுவனம் உலக சாதனை..!!

0

மத்தியப்பிரதேசம் மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனமான லக்‌ஷய பரிவார், மக்களிடையே ரத்த தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய முயற்சி செய்தது. குறைந்த நேரத்தில் அதிக நபர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து உலக சாதனைப்படைக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில், நேற்று கோல்டன் புக் ஆப் வேல்ர்ட் ரெகார்ட்சின் ஆசிய தலைவர் மனீஷ் விஷ்னோய் தலைமையில் 6 மணி நேரத்தில் 2,501 பேருக்கு ரத்த பரிசோதனை செய்து உலக சாதனைப்படைத்தனர். இதற்கு முன் கலிபோர்னியாவில் பதிவு செய்யப்பட்ட உலக சாதனையை இது முறியடித்தது. கலிபோர்னியா நாட்டில் ஆறு மணி நேரத்தில் 1,460 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது 260 பேர் ரத்த தானம் செய்தனர். காதலர் தினத்தன்று இச்சாதனை செய்தது இளைஞர்களிடையே ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × four =

*