;
Athirady Tamil News

கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பின் லஞ்சப் பணத்தை விழுங்கிய பெண் போலீஸ்..!!

0

மராட்டிய மாநிலம் கோலாப்பூர் பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருபவர் தீபாலி கட்கே. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான நன்னடைத்தை சான்றிதழ் பெறுவதற்காக வந்துள்ளார். ஆனால், தீபாலி அவரிடம் நன்னடத்தை சான்றிதழ் அளிப்பதற்கு 300 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த வாலிபர் ஊழல் தடுப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வகுத்த திட்டத்தின்படி அந்த இளைஞர் நேற்று இரவு அங்கு சென்றார். தீபாலியிடம் ரசாயனம் தடவிய 300 ரூபாய்களை கொடுத்தார்.

அவர் வாங்கும் போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடிக்க ஓடிவந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபாலி உடனடியாக தன் கையில் இருந்த ரூபாய் நோட்டுகளை வாயில் போட்டு விழுங்கினார்.

இதனால் அதிர்ந்து போன அதிகாரிகள், அவரது வாயில் கையை விட்டு ரூபாய் நோட்டுகளை வெளியில் எடுத்தனர். அதன்பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாரிகளிடம் பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தில் பெண் போலீஸ் ஒருவர் லஞ்சம் வாங்கிய பணத்தை வாயில் விழுங்கியது
அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 7 =

*