;
Athirady Tamil News

கொழும்பு புறநகர் பகுதி துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் காயம்…!!

0

கொழும்பு – மோதரை – வெல்ல பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் வாகனத்தில் வந்த நபரொருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ள நிலையில், விற்பனை நிலையமொன்றுக்கு அருகில் இருந்த 47 வயதான பெண்ணொருவர் இதில் காயமடைந்துள்ளார்.

அவர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் மோட்டார் வாகனத்தில் வந்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவரின் தகவல் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோதரை காவல்துறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − seven =

*