;
Athirady Tamil News

ரக்பி விளையாட்டினை அறிமுகம் செய்யம் பயிற்சி கிளிநொச்சியில்…!! (படங்கள்)

0

ரக்பி விளையாட்டினை அறிமுகம் செய்யம் பயிற்சி பட்டறை இன்று இரண்டாவது நாளாக கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மத்தியமகாவித்தியாலய மைதானத்தில் காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த பயிற்சி நிகழ்வு பகல் 1 மணிவரை இடம்பெற்றது.

ரக்பி சம்மேளனமும், கல்வி அமைச்சும் இணைந்து குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. வடமாகாணத்தில் ரக்பி விளையாட்டினை ஊக்குவிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த பயிற்சி நிகழ்வில் 300 மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற்றனர்.

இதன்புாது இலங்கை ரக்பி சம்மேளன தலைவர் தயாரட்ண, இலங்கை ரக்பி பெண்கள் அணியினர், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி, இராணுவ உயர் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பயிற்சி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பயிற்சியினை தொடர்ந்து பாடசாலைகளில் குறித்த விளையாட்டினை ஊக்குவிக்கும் நோக்குடன் உபகரணங்களம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 10 =

*