;
Athirady Tamil News

மரணத்துக்கு பின்னரும் சுமார் 5 ஆண்டுகள் கணவரை ஏமாற்றிய மனைவி: சுவாரஸ்ய சம்பவம்..!!

0

தன் மனைவியின் இறப்புக்கு பின்பும் சுமார் 5 ஆண்டுகளாக மனைவியின் வார்த்தையை கணவர் காப்பாற்றிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

தென் ஆப்ரிக்காவின் ஜோகானஸ்பர்க்கில் நிகில் பிட்டான் தனது மனைவி பிட்ரி பிட்டானுடன் வாழ்த்து வந்தார். பிட்ரி கடந்த 2013ல் தனது 69வது வயதில் உடல்நல குறைபாடு காரனமாக இறந்தார்.

இந்நிலையில் பிட்ரி இறக்கும் தருவாயில் தனது கணவர் நிகிலிடம், தான் இறந்த பின் வீட்டின் பாத்ரூமில் உள்ள செடிக்கு தொடர்ந்து தண்ணீர் ஊற்றும்படி கேட்டுக்கொண்டார்.

இதை சுமார் ஐந்து ஆண்டுகளாக நிகில் தொடர்ந்து செய்து வந்துள்ளார். இந்நிலையில் லண்டனில் பணியாற்றி வந்த இவர்களின் மகள் அண்டோனியா நிகோல், ஜோகானஸ்பர்க் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது தான் நிகில் பிளாஸ்டிக் செடிக்கு சுமார் 5 ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீர் ஊற்றிய விஷயம் தெரியவந்தது. இந்த கதையை கடந்த ஜனவரி மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து நிகோல் கூறுகையில்,’ நான் எனது தந்தைக்கு உதவ நேரடியாக சென்றேன். அங்கு அவர் தொடர்ந்து பிளாஸ்டிக் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை பார்த்தேன். இன்னும் என் தாய் அவருடன் இருப்பதாக உணர்கிறேன்’ என்கிறார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × two =

*