;
Athirady Tamil News

மன்னார் நகரசபைத் தலைவராகிறார் ஞானப்பிரகாசம் ஜெராட்..!! (படங்கள்)

0

மன்னார் நகர சபையின் தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் தலைவர் தெரிவு தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) மாலை மன்னார் ஆஹாஸ் விடுதியில் இடம்பெற்றது.

இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா , செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண அமைச்சர் எஸ். சிவநேசன், மாகாணசபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் போதே மன்னார் நகரசபை மேயராக ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களுடன் சபைகளை நடத்துவது தொடர்பில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் நகரசபை மற்றும் இரண்டு பிரதேச சபைகளைக் கைப்பற்றியுள்ளது. தற்போது மன்னார் நகர சபையின் தலைவர் தெரிவு அறிவிக்கப்பட்டுள்ளது. நகர சபையின் உப தலைவர் மற்றும் ஏனைய சபைகளின் தெரிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக மன்னாரில் இருந்து “இராவணேஸ்வரன்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*