;
Athirady Tamil News

புதிதாக அமைக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு…!! (படங்கள்)

0

ஹட்டன் டிக்கோயா தோட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

ஹட்டன், பிளான்டேஷன் குரூப் முகாமைத்துவப் பணிப்பாளர் வி.கோவிந்தசாமி தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் டிக்கோயா தோட்டத்தில் தொழிலாளர்களின் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக அத்தோட்டத்தின் செயற்பாடுகள் வலுவிழந்ததிருந்தது. இதற்குத் தீர்வு காணும் பொருட்டு வட்டவல பகுதியில் மூடப்பட்ட லொனெக் தோட்டத்திலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்ளுக்கே மேற்படி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வீடுகளுக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் அடிப்படைத் தளபாடங்களும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − fourteen =

*