;
Athirady Tamil News

பெண்ணின் சடலம் மீட்பு…!! (படங்கள்) இணைப்பு

0

கிரிவன் எலிய, விதுலிபுர பகுதியில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவரின் சடலம் ராஜபக்ஷ முதியன்சலாகே குஷிமாவத்தி (வயது 79) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

4 பிள்ளைகளின் தாயான குறித்த பெண் தனது வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து வந்துள்ளதாகவும், முதியோர் கொடுப்பனவு பெற வராததனையடுத்து உறவினர்கள் அந்த வீட்டுக்குச் சென்று பாரத்த போது அவர் உயிரிழந்துள்ளதைக் கண்டு தகவல் தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளாரா என்பது தொடர்பாக நோட்டன் பொலிஸாருடன், ஹட்டன் கை ரேகை அடையாளப்பிரினரும் இணைந்து புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

தொடர்புபட்ட செய்திக்கு….

தனிமையில் வசித்த வந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற அயலவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 2 =

*