;
Athirady Tamil News

இளைஞன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை…!! (படங்கள்) இணைப்பு

0

மட்டக்களப்பு, கரடியனாறு கோப்பாவெளி காட்டுப் பகுதியில் தன்னைத்தானே சுட்டு இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த காட்டுப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இளைஞன் ஒருவரின் சடலமும் துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் கரடியனாறு வெளியாகண்டிய பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய கந்தையா பிரகாஸ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர் உள்ளூர் தயாரிப்பான கட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

தொடர்புபட்ட செய்திக்கு….

தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட 19 வயது இளைஞன்..!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*