;
Athirady Tamil News

வவுனியாவில் கஞ்சா மற்றும் கரோயினுடன் மூவர் கைது…!!

0

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (15.02.2018) காலை 11.30 மணியளில் கஞ்சா , கரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தீடிரேன குறித்த நபர்களின் வீட்டினை சோதனைக்குட்பட்ட சமயத்தில் 10மில்லிகிராம் கரோயின் மற்றும் 4கிலோ 835கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதனடிப்படையில் மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*