;
Athirady Tamil News

வவுனியா நகரசபையின் தலைவராக நா.சேனாதிராஜா! உப தலைவராக புளொட் அமைப்பின் சந்திரகுலசிங்கம் (மோகன்) தெரிவு..!! (வீடியோ)

0

வவுனியா நகரசபையின் தலைவராக நா.சேனாதிராஜா! உப தலைவராக புளொட் அமைப்பின் சந்திரகுலசிங்கம் (மோகன்) தெரிவு

வவுனியா நகரசபையின் தலைவராக முதல் இரண்டு வருடங்களுக்கு நாகலிங்கம் சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உப தலைவராக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சந்திரகுலசிங்கம் (மோகன்) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் மற்றும் நகரசபை, பிரதேசசபைகளில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுடனான சந்திப்பின்போதே இம் முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன் நிமிர்த்தம் வவுனியா நகரசபைக்கு தலைவராக முதல் இரண்டு வருடங்களுக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் தலைவராக செயற்பட்ட மக்கள் சேவை மாமணி நா. சேனாதிராஜாவும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு முன்னாள் விவசாய போதனாசிரியரான தர்மலிங்கம் பரதலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களான த.சித்தாத்தன், செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + nine =

*