;
Athirady Tamil News

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் அனுமதி..!!

0

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று முன்தினம் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால், அவர் கோவாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதையடுத்து, வீடு திரும்பிய அவர் மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உணவின் விஷத்தன்மை காரணமாக முதல்வருக்கு வயிற்று வலி ஏற்பட்டது தெரிந்து மேல்சிகிச்சைக்காக மும்பை செல்ல பரிந்துரை செய்தனர். இதையடுத்து, அவர் நேற்று மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் கண்டிப்பாக இரண்டு நாள் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர். வரும் 19-ம் தேதி முதல்வர் பாரிக்கர் கோவா மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × four =

*