;
Athirady Tamil News

வவுனியாவில் டெங்கு நுளம்பு புதிய பரிணாமம் பெற்றுள்ளது…!!

0

வவுனியாவில் டெங்கு நுளம்பு புதிய பரிணாமம் பெற்றுள்ளது !வவுனியா பொது சுகாதார பரிசோதகர் தெரிவிப்பு

வவுனியா கந்தசாமி கோவில் வீதியிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த கிணறு ஒன்றிலிருந்து டெங்கு நுளம்பு பெருக்கெடுத்துள்ளது பூச்சியியலாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மேற்பார்வை பொது சுகாதாரப்பரிசோகர் க. தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா சந்தசாமி கோவில் வீதியில் டெங்கு நுளம்பு கைவிடப்பட்ட கிணற்றிர் பெருக்கமடைவது பூச்சியியலாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அபாய நிலையாகும். இவ்வாறு பெருக்கம் அடைவதால் கட்டுப்படுத்தவது ஒரு சவலாகும்.

கைவிடப்பட்ட கிணறுகள் தொடர்பாகஉடன் உங்கள் பகுதிகளிலுள்ள பொது சுகாதரப்பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி.

மலேரியா தடை இயக்கத்துடன் தொடர்பு கொண்டு கிணறுகளில் டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்த உடன் செயற்படுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 6 =

*